2 படத்துக்கே இவ்வளவு பில்டப்பா.? அப்பா பேர கெடுத்துருவாரு போலயே துருவ்

நடிகர் விக்ரமின் மகான் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, ஹிட் அடிக்கும் என்று படக்குழு நம்பி இருக்கிறது.வித்தியாசமான கெட்டப்பில், விக்ரம் தோன்றியதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா போன்றவர்கள் இணைந்து நடித்து வெளியாகி இருக்கிறது இந்த மகான் திரைப்படம். துருவ் விக்ரமை எப்போதும் ஸ்கூல்ப்பையன் போல விக்ரம் எல்லா இடங்களுக்கும் உடன் அழைத்துச் செல்வார். அதுமட்டுமின்றி துருவ் விக்ரம் ஒரே கதையில் 2 முறை நடித்த அவரின் ஒரே படமான ஆதித்யா வர்மா என்னும் படத்திற்கும் விக்ரம் மகனுக்கு செய்த உதவி அவ்வளவு பெரியது.

இதற்கிடையில் மகான் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வு அண்மையில் நடந்தது. அதற்கு வந்த விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் தனித்தனி கார்களில் வந்தனர். விக்ரம் வரும் போது ஆடி ரக சொகுசு காரில் வந்து இறங்கினார். அதன்பின் வந்த துருவ் விக்ரம் ரேஞ்ச் ரோவர் காரில் பயங்கர பில்டப்பில் வந்து இறங்கினார். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் அந்த ரேஞ்ச் ரோவர்.

விக்ரம் வந்த கார் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள ஆடி ரக கார். ஆனால் அவர் கூட அந்த பில்டப் காட்டவில்லை. ஆனால் அவரின் மகன் காட்டும் பில்டப் யப்பா தாங்க முடியலை என ரசிகர்கள் கருத்துகளை வீசி வருகின்றனர். நடிகர் விக்ரம் சாதாரணமாக நடிப்பில் இந்த உச்சத்திற்கு வரவில்லை. அவர் கண்ட சிரமம் கொஞ்ச நஞ்சம் இல்லை. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி, உடலை வருத்தி நடிப்பத்திலும் தயக்கம் காட்டாமல் நடிக்கக் கூடியவர் விக்ரம்.

அப்படி நடித்து பேர் வாங்கிய விக்ரம் கூட இந்த அளவிற்கு சீன் போட்டதில்லை. ஆனால் 2 படம் தான் நடித்து இருக்கிறார் துருவ் விக்ரம். ஆனால் அதற்குள் இவர் காட்டும் சீன் தாங்க முடியவில்லை என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால் என்றும் மாறாமல், ஒரே மாதிரி இருக்கும் விக்ரம் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தனது வாழ்வை தொடங்கிய இவர் இப்போது இந்த உச்சத்தில் இருக்க காரணம் அவரின் தன்னடக்கம் தான்.

ஆனால் துருவ் இப்போதே இந்த ஆட்டம் ஆடினால், இவர் பெரிய பெரிய படங்கள் கமிட் ஆகி பெரிய ஹீரோ ஆகி விட்டால் அவ்வளவுதான் நான்தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலும் சொல்வார் போல.இப்படி ஆட்டம் போட்ட பல நடிகர்கள் இன்று கக்கூஸ் கழுவும் விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். அதனை மனதில் வைத்து பில்டப்பை சற்று குறைத்தால் அப்பாவை போல காலம் போற்றும் கதாநாயகனாக பேர் வாங்கலாம்.