2வது திருமணம் செய்து கொண்டாரா பவானி ரெட்டி.? சர்ச்சையை கிளப்பிய சகோதரி

விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற நாடகத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. இவர் பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது களமிறங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியால் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துவிட்டார். பிக்பாஸ் வீட்டிற்கு பவானி ரெட்டி அடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை இவரை பற்றி பல தகவல்கள் கசிந்து வருகிறது.

ஏனெனில் இவரது கணவரின் தற்கொலைக்கு இவரும் ஒரு காரணமாக கருதப்பட்டு வருகிறார். காதலித்து, திருமணம் செய்து கொண்டு, எட்டு மாதங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த நிலையில், இவரது கணவர் தற்கொலை செய்துள்ளார். அந்த நேரத்தில் நடிகை பாவனி ரெட்டியுடன் வேறு ஒரு நபர் தொடர்பில் இருந்ததாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பலரும் கருதி வந்தனர்.

இந்நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா, இல்லையா என்பது குறித்து பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த ‘கதை சொல்லட்டுமா’ என்ற ஒரு டாஸ்கின் மூலம், இவர் தனது மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் தனது மனதில் இருக்கக்கூடிய பாரம் குறைந்ததாக பவானி ரெட்டி கூறியிருக்கிறார்.

சின்னத்திரை நடிகை பவானி ரெட்டியின் மூத்த சகோதரி சிந்து ஊடகங்களில், நடிகை பவானியின் வாழ்க்கை குறித்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பவானியும் அவரது கணவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும், எதிர்பாராதவிதமாக பவானி கணவரை இழந்து விட்டதாகவும், தனது கணவரின் நினைவால் தற்போது தவித்து வருவதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

சில காலங்களுக்கு முன்பு பவானி, வேறு ஒருவரை விரும்பியதால் அவருடன் பவானியை சேர்த்து வைத்து விடலாம் என்று குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதை இப்பதிவில் சிந்து வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் அவருடனும் பவானிக்கு சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனக்கு திருமணம் வேண்டாம் என்று பவானி மறுத்திருக்கிறார்.

ஆகையால், பவானி மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அவரின் தனிநபர் உரிமைகளை அவமதிக்க வேண்டாம் என்றும் சகோதரி சிந்து ஊடகங்கள் வாயிலாக அனைவரிடமும் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பதிவு பவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்.. ஆடிப்போன இணையதளம்

தமிழ் சினிமா பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அப்படி வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ஒரு சில ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலு தமிழ் சினிமா ரசிகர்கள் ...