2வது திருமணத்திற்கு தயாராகும் எமி ஜாக்சன்.. 3 நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகர்

தமிழில் மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன் அதைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு லண்டனில் சென்று செட்டிலானார்.

அங்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஜார்ஜ் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து எமி ஜாக்சன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து தன்னுடைய கணவர் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டோக்களையும் நீக்கினார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து அவர்கள் இருவரும் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடிகர் இதற்கு முன்பு பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அதோடு 3 பெண்கள் அவர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது போதிய ஆதாரம் இல்லாததால் அது அப்படியே முடித்து வைக்கப்பட்டது. இப்படி பல சர்ச்சைகளை சந்தித்த அந்த நடிகருடன் தான் எமி ஜாக்சன் தற்போது ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகிறார்.

ஒரு படவிழாவில் இவர்கள் இருவரும் சந்தித்தபொழுது நட்பு ஏற்பட்டு அது தற்போது டேட்டிங் வரை சென்றுள்ளதாக தெரிகிறது. தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து எமி ஜாக்சன் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.