19 வருடங்களுக்கு முன் விஜயகாந்த் செய்த காரியம்.. இப்போ அவிழ்த்து விடும் இயக்குனர்!

1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரில்லர் படமான சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருண்பாண்டியன். அதன்பிறகு இவர் வரிசையாக தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார்.  இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியன் அவர்களுக்கு மூன்று பெண் மகள்கள் உள்ளனர். அதில் இவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு தற்போது நடிகையாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக அருண் பாண்டியன் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு, அவரது மகள் கீர்த்தியும் அன்பிற்கினியாள் என்கிற திரைப்படத்தில் தந்தை, மகள் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர். அண்மையில் கீர்த்தி அன்பிற்கினியாள் திரைப்படத்தை தொடர்ந்து கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது.

ஏனெனில் இந்த போஸ்டரில் நடிகை கீர்த்தி கர்ப்பிணியாக இருக்கிறார். அவரின் தொப்புளில் இருந்து திரி போன்ற ஒரு கயிறு நீண்ட தூரத்திற்கு தொங்கி வருகிறது. அந்த கயிற்றின் இறுதி முனையை ஒரு கை பிடித்து பற்ற வைப்பது போல் மிகவும் கோரமான சிந்தனையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அருண்பாண்டியன் அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்த் குறித்த சுவாரசியமான தகவலை பதிவிட்டுள்ளார். ஏனென்றால் இணைந்த கைகள் படத்தைத் தொடர்ந்து அருண் பாண்டியன் இயக்கிய தேவன் படத்திற்காக விஜயகாந்திடம் கதை சொல்ல சென்றுள்ளார்.

அப்போது விஜயகாந்த், அருண்பாண்டியனிடம் கதையை கூட கேட்காமல் அவருடன் இணைந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவ்வளவு தூரம் இவர்களுக்கு இடையே நெருக்கம் இருந்துள்ளது. விஜயகாந்த்-அருண்பாண்டியன் கூட்டணியில் உருவான ‘தேவன்’ படம் சூப்பர் ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததே.

நடிகர் விஜயகாந்தின் இச்செயலால் அசந்து போனார் அருண்பாண்டியன். அதனைத் தொடர்ந்து தேமுதிக கட்சியின் உறுப்பினராகவும், பேரவை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார். மேலும் இவர் தென்னிந்தியாவின் நிதியாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ஆவார்.