150 கோடி தெய்வத்தாயின் படக் கதையை தூக்கி எறிந்த நெட்பிளிக்ஸ்.. நயன்தாராவும் இதற்கு உடந்தையா?

ராஜமௌலி இயக்கத்தில் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக வெளியான படம் தான் பாகுபலி. இந்தியாவில் மிக அதிக பொருட்செலவில் உருவானப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த பிரம்மாண்ட படைப்பு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியானது. இதில் நடித்த அத்தனைக் கலைஞர்களும் இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டனர். ஒரு காவியப்படைப்பாக நேர்த்தியாக ராஜமவுலி இயக்கி இருப்பார்.

பாகுபலி வந்த பிறகு பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி ஒரு ட்விஸ்ட் வைத்து அடுத்த பல மாதங்களுக்கு அந்த ரகசியத்தை பாதுகாத்து, அதன் பின் பாகுபலியின் இரண்டாம் பாகம் வந்த பிறகுதான், அந்த ரகசியம் வெளியானது. அதன் பின்னர் பாகுபலி 2 படத்திற்காக அவர்கள் செய்த பிரமோஷன் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி அவர்கள் செய்த புரோமசனில், அந்தப் படத்தின் ஒவ்வொருக் கதாபாத்திரமும் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. அப்படி நம் மனதில் மிக அதிகமாக பதிந்த கதாப்பாத்திரங்கள் சத்யராஜ் நடித்த கட்டப்பாவும், ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த சிவகாமி தேவி கதாபாத்திரமும் தான்.

இந்த இருக் கதாபாத்திரங்களும் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்பட்டது. அதன் பின் வந்த பல படங்களில் இந்த இரண்டு கேரக்டர்களையும் மேற்கோள்காட்டி வசனங்களாக வந்தது. அப்படி இருக்கையில் அதில் ராஜமாதா சிவகாமி தேவி என்று ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த அந்த கதாப்பாத்திரத்தை தனியாக எடுத்து ஒரு படமாக தயாரிக்க நெட்ப்ளிக்ஸ் முடிவு செய்தது. இப்படி தனியாக ஒரு படமாக வரும்போது மிகப்பெரிய வெற்றியடையும் என நம்பியது.

அதனால் ராஜமௌலியிடம் அனுமதி கேட்டு பின்னர் பாகுபலியின் அசோசியேட் இயக்குனரின் உதவியோடு அந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. 150 கோடி செலவு செய்து இந்தப்படம் எடுக்கப்பட்டது. இதில் சிவகாமி தேவி ஆக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. ஆனால் கதையைக் கேட்டு விட்டு அந்தப் படம் தனக்கு சரியாக இருக்காது என்று கூறி அவர் நழுவி விட்டாராம்.

அதன் பின் ஒரு வழியாக இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு நெட்பிளிக்ஸ் இல் வெளியிட நெட்ப்ளிக்ஸீடம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்த நெட்ப்ளிக்ஸ் இந்தப் படம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று நிராகரித்து விட்டது. நயன்தாரா நடித்து இருந்தால் நிச்சயமாக நன்றாக இருக்கும். படத்தை திரும்பி திரும்பி போட்டு பார்த்தும் திருப்தி அளிக்கவில்லை. இவ்வளவு செலவு செய்து மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை நம்பியிருந்த நெட்பிளிக்ஸ் கைவிட்டுவிட்டது. இதனால் அந்த படக்குழு மிகுந்த வேதனையில் இருக்கிறது. 150 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் இப்போது கேட்பாரற்று கிடக்கிறது.

இதேபோல பல படங்கள் இதுபோன்ற ஓடிடியை நம்பி எடுக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் இந்த படம் நிராகரிக்கப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சிதான். பிறகு பார்த்து கொள்ளலாம் என்று 150 கோடி புராஜெக்ட்டை அசால்டாக நெட்பிளிக்ஸ் தூக்கிப்போட்டு விட்டது. படக்குழுவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.