15 லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய ஜாக்குலின்.. குடும்பத்தினருடன் வெளியான புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் இவர் செய்த சேட்டைகளை ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பலரும் ஜாக்குலின் குரலை கிண்டல் செய்து வந்தனர். ஆனால் பின்பு அந்த குரலே அவருக்கு சாதகமாக மாறி தொகுப்பாளரின் வெற்றிக்கு வித்திட்டது என்றே கூறலாம்.

ஜாக்குலின் தொகுப்பாளராக பணியாற்றிய அதே சேனலில் தற்போது சின்னத்திரை நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். இவர் தற்போது தேன்மொழி எனும் சீரியலில் நடித்திருந்தார்.

அதுபோக அப்பப்ப கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்காக சில முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

தற்போது ஜாக்லின் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் தற்போது அவர் கார் வாங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிக்கு அடுத்தபடியாக ஜப்பான் மார்க்கெட்டை பிடிக்கும் பிரபல நடிகர்.. மெர்சலாக வெளிவந்த அப்டேட்

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவரது படங்கள் தமிழகத்தில் வெளியாவதை போலவே வெளிநாடுகளிலும் வெளியாகும். ...