முன்பைவிட சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ரசிகர்களும், சீரியல்களை விரும்பிப் பார்க்கும் பார்வையாளர்களும் அதிகரித்துவிட்டனர். இதை நன்கு அறிந்த சின்னத்திரை இயக்குனர்கள், சீரியல்களில் வித்தியாச வித்தியாசமான திருப்புமுனைகளை வைத்து கதையை சற்று விறுவிறுப்பாக நகர்த்தி வருகின்றனர்.

அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்பதை, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இருக்கக்கூடிய காட்சியை, ஒரு சிறிய ப்ரோமோ மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அந்த ப்ரோமோவை காண்கிற ரசிகர்கள் அந்த வார எபிசோடுகளில் வித்தியாசமான திருப்புமுனை இருப்பதாக எண்ணி அனைத்து எபிசோடுகளையும் தவறாமல் காண்கின்றனர்.

அவ்வாறான ப்ரோமோகளின் மூலம் டாப்-5 இடத்தை தக்க வைத்துக் கொண்ட சீரியல்கள் எவை என்றால் ரோஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 இவைகள்தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களின் கருத்து என்னவெனில், கண்ணன் கதாபாத்திரத்தின் மீது பழிபோட போகிறீர்கள் என்றும் இந்த கண்ணன் கதாபாத்திரம் தான் நடிகர் பரத் நடித்த எம் மகன் திரைப்படத்தில் இருக்கும் வடிவேலு போல ஆக்கி விட்டீர்கள் என்றும் பல்வேறான கருத்துகளை வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

பாரதிகண்ணம்மா சீரியலில் லட்சுமி கூறும் ஒற்றை வார்த்தை சீரியலில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

பாக்யலக்ஷ்மி சீரியலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தை பலரும் புகழ்ந்து வருகின்றனர். செழியனுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக கூறி வருகின்றனர். இப்போது தான் சரியான மாமியாராக நடந்து கொள்கிறீர்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2 சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர் ஒருவர், ‘இருக்கும்போது எந்நேரமும் கரித்து கொட்டிவிட்டு இல்லாதபோது அவரை நினைத்து அழுவது’ என்பதே தமிழ் சினிமாவின் எழுதப்படாத தலையெழுத்து என்று தெரிவித்துள்ளார். சந்தியாவிற்கு சாதாகமாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரோஜா சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கதையில், இயக்குனர் காட்டும் அலட்சியம், நன்றாக சென்ற கதையை ஏன் இவ்வாறு இழுக்கிறார்கள்? என்று ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். இரண்டு வாரமாக கதாநாயகன் மயக்கத்திலேயே இருப்பார் என்றும் கதாநாயகி இன்றைய எபிசோடில் அழுவது போலவும் நாளை எபிசோடில் கதறி அழுவது போலவும் ஜவ்வாக இழுத்து வருகிறார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேற்கூறிய ஐந்து சீரியல்களிலும் அதிக ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்து கொண்டு கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்லும் சீரியலாக இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.