13 வருடம் கழித்து அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.. இவ்வளவு பெரிய தாடியா.!

அறிந்தும் அறியாமலும் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் நவ்தீப். அதன் பின்னர் நெஞ்சில் ஜில் ஜில், இளவட்டம், ஏகன், அ ஆ இ ஈ, இது என்ன மாயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஏகன் படத்தில் நவ்தீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின்னர் தல அஜித்தை நவ்தீப் சந்தித்துள்ளார். அதுவும் பைக் ரைடிங் செல்லும்போது அஜித்தை சந்தித்துள்ளார்.

அஜித் போலவே நடிகர் நவ்தீப்புக்கும் பைக் ரைடிங் செல்வது மிகவும் பிடிக்கும். இந்நிலையில் நவ்தீப் ஹைதராபாத்தில் அஜித்துடன் பைக் ரைடிங் சென்றுள்ளார். அப்போது ரைடிங் கியரில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நவ்தீப் கூறியிருப்பதாவது, “அஜித் சார் ஹாய் சொன்ன தொனியைப் பார்த்து நான் வியந்துபோனேன்.

அந்த ஹாய் அவரைப் பலமுறை சந்தித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவரது எளிமையையும், நுண்னறிவுள்ள குணத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அஜித் சார் உண்மையிலேயே அற்புதமான மனிதர்” என்று உற்சாத்துடன் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சிக்காக படக்குழுவினருடன் ரஷ்யா சென்ற அஜித் படப்பிடிப்பு முடிந்ததும் நாடு திரும்பாமல், பைக் ரைடு சென்றார். தற்போது வலிமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதால் அஜித் ரிலாக்ஸாக பைக் ரைடு சென்று பொழுதை கழித்து வருகிறார்.

வீட்டிற்கு உள்ளேயே விடாமல் துரத்திய லதா.. கடுப்பான தனுஷ் போட்ட பெரிய குண்டு

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இரு குடும்பத்தினரும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் ...