13 வருடத்திற்கு பின் கவர்ச்சிக்கு தாவிய நயன்தாரா.. என்ன காரணமாக இருக்கும்?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இதுதவிர நயன்தாரா ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபகாலமாகவே நயன்தாரா தேர்வு செய்யும் கதைகளும், கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாகவே உள்ளன. சமீபத்தில் வெளியான அவரது எந்தவொரு படத்திலும் சிறு கவர்ச்சி கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நயன்தாரா மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா மீண்டும் கவர்ச்சி காட்ட தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் நயன்தாரா கவர்ச்சி காட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாரா ஏற்கனவே தமிழில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா, சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன், விஷால் நடிப்பில் வெளியான சத்யம் உள்ளிட்ட படங்களில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு இடைவெளி விட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய நயன்தாரா படங்களில் கவர்ச்சி காட்டுவதை முற்றிலும் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் கவர்ச்சிக்கு தாவ என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி உள்ளனர். ஒருவேளை அது பாலிவுட் படம் என்பதால் கவர்ச்சிக்கு ஓகே சொல்லி விட்டாரா? அல்லது சமீபகாலமாகவே நயன்தாராவிற்கு வயதாகி விட்டது என நெகடிவ் கமெண்ட் எழுந்து வருவதால், இந்த முடிவை எடுத்துள்ளாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

8 வருடம் கழித்து மீண்டும் விஜய்யுடன் சர்ச்சை இயக்குனர்.. இந்த தடவ அரசியல தாண்டி இருக்கு

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தை தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தாண்டவம், சைவம், இது என்ன ...