125 படங்களுக்கு மேல் நடித்த கார்த்திக்.. சினிமாவில் வெற்றி பெற காரணம் இது தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு இணையாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அப்போதெல்லாம் ரஜினி கமல் படத்திற்கு இணையாக கார்த்திக் படத்திற்கான வரவேற்பும் இருக்கும். அந்த அளவிற்கு பல கோடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார்.

கார்த்திக் தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து வந்தார் ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைய அப்படியே சினிமாவை விட்டுசிறிது காலங்கள் விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் தனியாக கட்சி தொடங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் இயக்குனர்கள் பலரும் கார்த்தியை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தனர். பின்பு படத்தின் கதையும் தனக்கான கதாபாத்திரத்தின் கேட்டு மீண்டும் படங்களில் நடிப்பதற்கு சம்மதித்தார். அதனால் தற்போது வரை ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் முத்துராமனின் மகன் தான் கார்த்திக். திரைத்துறை குடும்பத்திலிருந்து அறிமுகமாகியிருந்தாலும் கார்த்திக் தனது திறமையின் மூலம் தான் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். அந்த காலத்தில் பல நடிகர்களும் எம்ஜிஆர், சிவாஜி போல்தான் நடிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் கார்த்திக் அவர்களைப்போல் நடிக்காமல் தனக்கென தனி பாணியை உருவாக்கி அதன் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

கார்த்திக் நடித்த படங்கள் அனைத்திலுமே எதார்த்தமான நடிப்பு வெளிப்படுத்தபட்டிருக்கும். இது ரசிகர்கள் பிடித்துப்போக ஒரு காரணமாக அமைந்தது. மேலும் கார்த்திகை தங்களது நாயகனாகவே பல ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர். அது மட்டுமில்லாமல் சினிமாவில் வெற்றி பெற்றதற்கு முழுக்க முழுக்க கார்த்திக்கின் நடிப்பும் அவரது திறமையும் தான் காரணம் என பல பிரபலங்களும் கூறியுள்ளனர்.

வாடிவாசல் படத்தில் அமீரின் கதாபாத்திரம் இதுதானாம்.. அப்பனா மிருகத்தனமான பல கொலகுத்து இருக்கு

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனை ...