12 நாளில் உருவான மோகன் படம்.. உச்சகட்ட பயத்தை ஏற்படுத்திய சூப்பர் ஹிட்

தமிழ் சினிமாவிலும் ஆங்கில படத்துக்கு இணையாக அல்லது சில படங்கள் அவர்களையும் மிஞ்சி எடுக்கப்படும் என்று நிரூபித்த திகில் படங்கள் உண்டு. உருவம் படம் வயது வந்தோருக்கான திகில் திரைப்படம். அப்படிப்பட்ட திகில் நிறைந்த திரைப்படம் தான் 1993 இல் வெளியான உருவம். இதனை ஜி. எம். குமார் இயக்கினார். உருவம் படத்தில் மோகன், பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். எப்பொழுதுமே காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான மைக் மோகன் உருவம் திரைப்படத்தில் பேயாக அடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

மேலும் இதில் பேய் வேடமிட்டு இருக்கும் மோகனை பார்த்தால் குலை நடுங்க வைக்கும். அத்துடன் இந்தப் படத்தை 12 வயது மிஞ்சியவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வயது வந்தோருக்கான திகில் படமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தை இரவு நேரத்தில் மொபைலை கையில் வைத்துக்கொண்டு ஹெட்போன் போட்டுக்கொண்டு பார்க்கவே வேண்டாம். அந்த அளவிற்கு பயம் காட்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உருவம் படம் வெறும் 12 நாளில் உருவாக்கப்பட்டது என்பது ஆச்சரியதிற்குரிய உண்மையாகும்.

105 நிமிடங்களே ஓடக்கூடிய உருவம் படத்தின் பட்ஜெட் கம்மியாக இருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி கண்டது. பொதுவாக மைக் மோகன் திரைப்படத்தில் இருக்கும் பாடல்களை கேட்பதற்கு என்றே அந்த காலத்தில் தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றிருக்கும். மேலும் திகில் படத்திற்கு கூடுதல் அச்சத்தை கொடுப்பது பின்னணி இசையே. இதனை இசைஞானி இளையராஜா கச்சிதமாக செய்திருப்பதே படத்தின் கூடுதல் அம்சம்.

என்ன அஞ்சலி, உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சு.. கவலையில் ரசிகர்கள்

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்காடித்தெரு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஞ்சலி. அதன்பிறகு எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் இளம் ரசிகர்களை பெரும் அளவில் ...