12 கிலோ உடல் எடையை குறைத்து ஜொலிக்கும் பிரியாமணி.. அழகின் ரகசியம் இதுதானாம்

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்த பின்னர் தான் பிரியாமணிக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. காரணம் இந்த படத்தில் இவரின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் பலரது பாராட்டை பெற்றது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பிரியாமணி வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு கணவருடன் செட்டிலாகி விட்டார். அதன் பின்னர் ஒரு சில தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சி நடுவராக இருந்து வந்தார். அந்த சமயத்தில் உடல் எடையும் அதிகரித்து இருந்ததால் பிரியாமணி படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பருத்திவீரன் முத்தழகு தோற்றத்திற்கு மாறியுள்ளார். இவரின் இந்த புதிய தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரியாமணி, தற்போது தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர தமிழில் பிரசாந்த நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நடித்து வரும் பிரியாமணி, சமீபகாலமாக கவர்ச்சியான படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறாராம். அதுமட்டும் இன்றி கடந்த நான்கு ஆண்டுகளாக, சைவத்திற்கு மாறியதால் முன்பை விட தற்போது அழகாக தெரிகிறேன் என அழகின் ரகசியத்தையும் வெளிப்படையாக கூறியுள்ளார். அழகின் ரகசியத்தை கூறியதற்கு சில ரசிகர்கள் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

பிரியாமணியை ரசிகர்கள் எப்போதும் பருத்திவீரன் முத்தழகாகவே பார்க்க ஆசைப்படுகிறார்கள். அந்த பிரியாமணியையே தற்போது வரை ரசிகர்கள் விரும்பி வருகிறார்கள். எனவே உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ள பிரியாமணி மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வடசென்னை ராஜன், டான்சிங் ரோஸ்.. கல்லா கட்ட போகும் பா ரஞ்சித், வெற்றிமாறன்

வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ...