11 வருடத்திற்கு முன்பு சிங்கமுத்து மீது வடிவேலு போட்ட நில மோசடி வழக்கு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

கடந்த 2007 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு சபரி முத்து என்பவரிடம் நடிகர் சிங்கமுத்து பரிந்துரையின் அடிப்படையில் தாம்பரம் அருகில் 3 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு அந்த இடத்தில் கழிவுநீர் பண்ணை வருவதால் அரசாங்கம் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறி சிங்கமுத்து அந்த நிலத்தை மற்றொருவருக்கு கை மாற்றி உள்ளார்.

அதன் பிறகு அந்த இடத்தை அசோக்நகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சேகர் என்பவருக்கு 20 லட்சத்திற்கு விற்றதாக வடிவேலுவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையாகவே இடத்தை ஒரு கோடியே 93 லட்சத்திற்கு சிங்கமுத்து விற்றுள்ளதாக வடிவேலுக்கு தெரியவந்துள்ளது.

ஏனென்றால் கடந்த 2010ஆம் ஆண்டு வருமானவரி தணிக்கை செய்ய வந்தபோது தாம்பரத்தில் வாங்கிய நிலத்தை ஒரு கோடியே 93 லட்சத்திற்கு விற்பனை செய்ததற்காக வரி செலுத்த வில்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன் பிறகு சிங்கமுத்துவின் மீது வடிவேலு நில மோசடி புகார் அளித்துள்ளார்,

எனவே இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் நடந்த குறுக்கு விசாரணையில், நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காகவே தன் மீது பழி போட்டுள்ளதாக சிங்கமுத்து நீதிமன்றத்தில் வாதாடினார்.

அதன் பிறகு நேற்று 14-வது மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தில் வைகைப்புயல் வடிவேலு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் வடிவேலு ஆஜராகாததால் வழக்கை, வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அன்றைய தினம் நடிகர் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் ஆஜராக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் படங்களில் வைகைப் புயல் மற்றும் சிங்கமுத்து காமினேஷன் இல் தாறுமாறான நகைச்சுவை வெளிப்பட்டது. இவர்களுடைய நட்பு தற்போது நீதிமன்றத்தில் வாதாடும் அளவுக்கு சென்றது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.