தளபதினு சொன்னாலு போதும் விசில் சத்தம் காதை கிழிக்கும். அந்த அளவுக்கு நம்ம விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்காங்க. இவரோட படம் முதல் நாள் முதல் காட்சிக்கு அவ்வளவு கூட்டம் இருக்கும். அதுவும் தியேட்டர்ல இவரோட ரசிகர்கள் பண்ற அலப்பறை இருக்கே அப்பப்பா சொல்லி மாளாது. அந்த அளவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே விஜய்க்கு இருக்காங்க.

இப்போ கொஞ்ச நாளாவே நம்ம விஜய் தாங்க டிவிட்டர் டிரெண்டிங்ல இருக்காரு. அதுக்கு காரணம் அவரோட புதிய படங்கள் குறித்த அப்டேட் வெளியாகுறது தான். இப்போ விஜய் அவரோட 65வது படமான பீஸ்ட் படத்துல தான் நடிச்சுக்கிட்டு இருக்காரு. ஆனா அதுக்குள்ள அவரோட 69வது படம் வரைக்கும் அப்டேட் வந்துருச்சு. அதனால தான் இப்போ விஜய் டிரெண்ட்ல இருக்காரு.

தளபதி விஜய் இப்போ நெல்சன் இயக்கத்தில பீஸ்ட் படத்தில நடிக்கறதும் இது அவரோட 65வது படம் என்பதும் நம்ம எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதையடுத்து தளபதி 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளதும் அந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க உள்ள செய்தியும் கோலிவுட் முழுக்க ஏற்கனவே பரவி இருக்கு.

இந்த நிலையில் தளபதி 67வது படத்தை ஏற்கனவே மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க போறதாகவும், தளபதி 68வது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க போறதாவும், தளபதி 69வது படத்தை இயக்குனர் அட்லி அல்லது இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதியின் சம்பளம் மட்டும் 100 கோடியை தாண்டுவதால் ஒரு படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 250 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த படங்களுக்கு கிட்டத்தட்ட 1000 கோடி வரை பட்ஜெட் வரலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்திய கேட்ட விஜய் ரசிகர்கள் நாங்க சிங்கிள் அப்டேட் தான கேட்டோம் நீங்க ஒரு அப்டேட் மழையவே பொழிஞ்சிருக்கீங்களேனு உச்சக்கட்ட மகிழ்ச்சியில இருக்காங்க. இந்த மாதிரி விஜய் அவரோட அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளை ஒரே சமயத்தில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.