1000 கோடி ஏமாற்றிய வெற்றிமாறன் பட பிரபலம்.. ஆடிப்போன திரையுலகம்

வெற்றிமாறன் தற்போது விடுதலை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

இவர் தமிழில் கோ, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அதர்வா நடிப்பில் வெளிவந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். தயாரிப்பு தவிர அவர் கல்குவாரி உள்ளிட்ட சில தொழில்களையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சட்டத்திற்கு புறம்பாக வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடு, ஆபீஸ் போன்ற பல இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

இரண்டு நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட அந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது எல்ரெட் குமார் வீட்டில் கணக்கில் வராமல் 3 கோடி ரூபாய் பணமும், 9 கிலோ தங்கமும் கிடைத்திருக்கிறது. அதை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை பற்றி மேலும் சில தகவல்களையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அதாவது அவர் 1000 கோடிகளுக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்து இருக்கிறார். அதை கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அப்படி அவர் சட்டத்தை ஏமாற்றிய அந்த கருப்பு பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.

மேலும் அவரிடம் இந்த கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தயாரிப்பாளரின் இந்த வருமான வரி மோசடி தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.