100 கோடிக்கு மேல் வசூல்.. ஒரே மாதத்தில் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ் ஹீரோவின் படம்

நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது டாக்டர் படம் தான். வளர்ந்து வரும் நடிகர் என்ற நிலையில் இருந்து ஒரு டாப் நடிகர் என்ற அந்தஸ்தை பெறும் அளவிற்கு டாக்டர் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது.

இதுவரை சிவகார்த்திகேயன் படம் என்றாலே நான் ஸ்டாப் டாக்கிங் காமெடி சரவெடி என இருக்கும். ஆனால் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு டயலாக்கே கிடையாது. மிகவும் அளவான டயலாக் தான். இருப்பினும் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார். இந்த சிவகார்த்திகேயனையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பது டாக்டர் படம் மூலம் நிரூபனமாகி விட்டது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் இனி நடித்தால் டாக்டர் படம் போன்ற தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி தற்போது வரை தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால் டாக்டர் படம் உலகம் முழுவதும் தற்போது வரை சுமார் 90கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இனி வரும் நிச்சயம் 100 கோடியை தாண்டி விடும் என கூறுகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் டாக்டர் படம் வரும் தீபாவளி அன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று மாலை 6.30 மணிக்கு பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி.யில் டாக்டர் படம் ஒளிபரப்பாக உள்ளதாம். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படத்தை இவ்வளவு சீக்கிரத்தில் டிவியில் ஒளிபரப்பு செய்ய உள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் படம் வேற லெவல் வெற்றி பெற்று விட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குண்டாக மாறிய ரித்திகா சிங் புகைப்படம்.. குத்து சண்டை எல்லாம் இப்ப போடறது இல்ல போல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் ரித்திகா சிங். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ...