10 வருடங்களாக காப்பி அடித்தும் பிரயோஜனமில்லை.. விஜய் சேதுபதியை வைத்து முக்கியும் முடியவில்லை

ஆரம்ப காலங்களில் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி சன் டிவி ஆகத்தான் இருந்தது. சன் டிவியில் வாரம் ஐந்து நாட்கள் சீரியல்கள் மற்றும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரைப்படங்கள் என ரசிகர்களை மகிழ்வித்தவந்தது. அப்போது பல புதிய தொலைகாட்சிகள் வந்தாலும் சன் டிவியின் டிஆர்பியை அசைக்கக்கூட முடியவில்லை.

அதன்பின்பு விஜய் டிவி என்ற புதிய தொலைக்காட்சி வந்தது. ஆரம்பத்தில் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கபடாத இந்த தொலைக்காட்சி புதுவிதமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர தொடங்கியது. அதன் பின்பு ஒரு நிலையான இடத்தைப் பிடித்த பெருவாரியான ரசிகர்களை பெற்றது.

மேலும் தற்போது விஜய் டிவி பல தொலைக்காட்சிகளின் டிஆர்பியை தவிடுபொடியாக்கி எப்போதுமே முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. இதனால் சன் டிவி எப்படியாவது விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் விஜய் டிவியை பார்த்து சில ரியாலிட்டி ஷோக்களை காப்பியடித்து.

அதாவது விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர். இது பல சீசன்களை கடந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அப்படியே காப்பியடித்த சன்டிவி இதே பாட்டு நிகழ்ச்சியை சன் சிங்கர் என ஒளிபரப்பு செய்தது.

இதைத்தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் இருக்கும் பல பிரபலங்களை உருவாக்கிய நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு மற்றும் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை சன் டிவியில் காமெடி ஜங்ஷன் என்றும் இன்னும் பல பெயர்கள் காப்பி அடித்தது. ஆனால் இதில் எந்த நிகழ்ச்சியும் சரியாக போகவில்லை.

இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் சன் டிவி பிரபல நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை அரங்கேற்றியது. ஆனால் இதுவும் தோல்வியையே சந்தித்தது.

இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை சன்டிவி காப்பியடித்த தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது. ஆனால் அது எதுவுமே ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. மேலும் மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் நம்பிக்கை மிகுந்த தொலைக்காட்சியாக விஜய் டிவி வளர்ந்துள்ளது.