விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரபலமானது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு விதங்களில் மாறி மாறி ஒளிபரப்பாகிறது. அந்தவகையில் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீனியர் 8வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் டைட்டில் வின்னரை தேர்வு செய்யும் இறுதிச்சுற்றுகான போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த சுற்றில் அனுராதா ஸ்ரீராம், எஸ்பிபி சரண், உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். மேலும் ஆனந்த் வைத்தியநாதன், மால்குடி சுபா, கல்பனா, சித்ரா உள்ளிட பலரும் சிறப்பு நடுவர்களாக கலந்து கொள்கின்றனர். இன்றைய சிறப்பு விருந்தினராக பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.

இதில் மானசி, முத்துச்சிப்பி ,ஸ்ரீதர் சேனா, அபிலாஷ், பரத், அனு ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுள் மக்கள் யாருக்கு அதிகம் வாக்குகளை வழங்குகிறார்கள் அதன் அடிப்படையிலும், நடுவர்கள் வழங்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் இறுதிச்சுற்றில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 8 டைட்டில் வின்னராக ஸ்ரீதர் சேனா மக்கள் வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒட்டுமொத்த வாக்குகளில் 25% சதவீதத்தை தன்வசப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு விஜய் டிவியின் சார்பில் 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஸ்ரீதர் சேனா வைல்ட் கார்ட் என்ட்ரி இன் மூலம் இறுதி சுற்றிற்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இரண்டாவது இடம் பரத் பெற்றுள்ளார். இவருக்கு மொத்த வாக்குகளில் இருந்து 22% கிடைத்துள்ளது. மேலும் பரத்திற்கு விஜய் டிவியின் சார்பில் மூன்று லட்சமும், விளம்பரதாரர் வாயிலாக 50 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்றாவது இடம் அபிலேஷ் பிடித்துள்ளார்.

இவருக்கு இரண்டு லட்சம் பரிசுத்தொகை விஜய் டிவியின் சார்பில் வழங்கப்பட்டது. பெரும்பாலானோர் முத்துச்சிப்பி தான் சூப்பர் சிங்கர் சீசன் 8ன் டைட்டில் வின்னர் ஆக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.