ஹெல்மெட் போட்டு வெளிவந்த அஜித் மகன் ஆத்விக் புகைப்படம்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் மிகவும் எளிமையாக அனைவரிடமும் பழகக்கூடியவர் தல அஜித். ரசிகர்கள் அஜித்துடன் போட்டோ எடுக்க விரும்பினால் முகம் சுழிக்காமல் இன்முகத்துடன் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வார்.

அஜித் நடிப்பதற்கு முன்பு இருந்தே பைக் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு பைக் ரைடு என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. அதனால் தற்போது பைக்கிலேயே வட மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அஜித்தை வழியில் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது.

அஜித்தின் இந்த புகைப்படங்களை பார்த்து கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஓர் ஆச்சரியமான விஷயம் காத்திருக்கிறது. அஜித்தின் மகனான ஆத்விக்கை குட்டி தல என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

தற்போது ஆத்விக்கும் தன் தந்தையைப் போலவே பைக் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். தலையில் ஹெல்மெட் உடன் ஆத்விக் தன் தந்தையுடன் இருக்கும் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்றும், தல எட்டடி பாய்ந்தால் குட்டி தல பதினாறு அடி பாய்கிறது என்றும் ஆரவாரமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வடிவேலுக்கு கதை சொன்ன சீனு ராமசாமி.. வடிவேலு ரியாக்சன்?

மக்கள் செல்வன் விஜய்  சேதுபதியை வைத்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கும் படம் மாமனிதன். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ...