ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக மாறிய 5 நடிகர்கள்.. எம்ஜிஆர், சிவாஜிக்குப் நிரந்தர வில்லன் இவர்தான்

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு பெரிய உயரத்தை அடைந்த ஹீரோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஹீரோக்களாக அறிமுகமான சில நடிகர்கள் வில்லனாக நடித்த அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறு ஹீரோவை விட வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 பழம்பெரும் நடிகர்களை பார்க்கலாம்.

பி எஸ் வீரப்பா: பி எஸ் வீரப்பா ஆரம்பத்தில் மணிமேகலை, மதனமாலா போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் படங்களில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதைதொடர்ந்து அடுத்த தலைமுறைகளான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.

ஆர்எஸ் மனோகர்: ஆர்எஸ் மனோகர் 1951 ஆம் ஆண்டு ராஜாம்பாள் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைதொடர்ந்து 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் ஆர்எஸ் மனோகர் நடித்துள்ளார். ஹீரோவாக ஆரம்பித்த இவரது திரைப்பயணம் நகைச்சுவை நடிகர், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

ஜெய்சங்கர்: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் வில்லன் நடிகர் என அறியப்படுபவர் ஜெய்சங்கர். இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தில் இவருடைய வில்லன் நடிப்பு புதிய பரிமாணத்தில் இருந்தது.

ஸ்ரீகாந்த்: ஸ்ரீகாந்த் 1965 இல் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பின்பு ரஜினியின் பைரவி படத்தில் வில்லனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கமலஹாசன் படங்களிலும் இவர் வில்லனாக நடித்துள்ளார்.

எம் என் நம்பியார்: எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமானவர் எம்என் நம்பியார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக விளங்கினார். இவர் 1946 இல் வெளியான வித்யாபதி படத்தில் பாகவதராக நடித்திருந்தார். அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றாலே அதில் எம்என் நம்பியார் தான் வில்லன். எம்ஜிஆரின் வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை படங்களில் நம்பியார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.