ஹிந்தி பீஸ்ட் டிரைலருக்கு குவியும் லைக்ஸ்.. இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா, நம்பவே முடியல

நெல்சன் இயக்கத்தின் தளபதி விஜய் நடிப்பில் புலி படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளிவர உள்ளது இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளிவந்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

இத்திரைப்படத்தில் விஜய் ஒரு ரா ஏஜென்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. பீஸ்ட் படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது.  அதன் ஹிந்தி வெர்சன் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது

அதாவது தமிழில் வெளிவந்த பீஸ்ட் பல சாதனைகளை முறியடித்து தற்போது இரண்டே நாளில் 36 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் நெல்சன் ஒருபுறம் குதூகலத்தில் உள்ளார்.

இதேபோல் பான் இந்தியா மூவி என்பதால் ஹிந்தியில் இன்று பீஸ்ட் பட ட்ரெயிலர் வெளிவந்தது. தமிழில் எதிர்பார்த்ததுபோல் ஹிந்தியில் 5% கூட வரவேற்பு இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.

இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் 6000 பார்வையாளர்களை தாண்டி உள்ள இந்த டிரைலருக்கு 77 ஆயிரம் லைக்ஸ் குவிந்துள்ளது. இது எப்படி சாத்தியம் அதாவது விஜய் ரசிகர்கள் மட்டும் முழு டிரைலரை பார்க்காமலேயே லைக் மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.

ஹிந்தியில் வரவேற்பு இப்படித்தான் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனாலும் படம் வெளிவந்தால் தான் முழு சுயரூபம் தெரியும் என்கிறது நெல்சனின் வட்டாரம்.