ஹிந்தியில் பிரபல நடிகையை இயக்கும் ரேவதி.. இவங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ் ஆச்சே

தமிழ் சினிமாவில் ரேவதி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் அனைத்து முன்னணி நடிகைகளுக்கும் ஒரு போட்டியாளராக இருந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனக்கான ரசிகர்களை வைத்து இருந்தார்.

ரேவதி நடிப்பில் வெளியான படங்களுக்கு அப்போது பெரிய அளவில் வரவேற்பு இருந்ததால் பல இயக்குனர்கள் ரேவதியை வைத்து பல படங்களை இயக்கி வெற்றி கண்டனர். மேலும் ரேவதிக்கு பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் கொடுத்தனர். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையின் மூலம் சினிமாவில் முன்னேறினார்.

பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் ரேவதி தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தனக்குப் பிடித்த கதை ஒன்று இருப்பதாக பல தயாரிப்பாளர்களிடமும் கூறியுள்ளார். தற்போது தயாரிப்பாளர்கள் படத்தின் கதையை கேட்டு படத்தை தயாரிக்க முன் வந்துள்ளனர்.  அதனால் கூடிய விரைவில் ரேவதி இயக்குனராக அவதாரம் எடுப்பார் எனக் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது ரேவதி முதன்முதலாக ஹிந்தியில் கஜோல் வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். ரேவதியும் கஜோலும் பல வருடமாக நெருங்கிய தோழிகள். அதனால் ரேவதி கஜோலிடம் படத்தின் கதையை கூற அது கஜோலுக்கு பிடித்துப்போக நடிப்பதற்கு சம்மதித்துள்ளார்.

மேலும் படத்தின் கதை ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரேவதி படப்பிடிப்பை நடத்துவதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கூடிய விரைவில் படப்பிடிப்பை மும்பையில் நடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.