தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது வரை இவர் மீதான இந்த கிசுகிசுக்கள் வெளியாகி கொண்டு தான் உள்ளது. அந்த அளவிற்கு பெண்கள் விஷயத்தில் கமல்ஹாசன் காதல் மன்னன் என்றே கூறலாம். இந்நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதுபோல தான் கமலின் மகள் என்பதை நிரூபித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

கமலின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். இருப்பினும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் இறுதியாக லாபம் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ருதிஹாசன் முன்னதாக லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதனை தொடர்ந்து தற்போது ஸ்ருதிஹாசன் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவருடன் பழகி வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர ஸ்ருதிஹாசனும் அவ்வப்போது அவரது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்து வருவார். அந்த வரிசையில் தற்போது காதலருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காரணம் அந்த வீடியோவின் இறுதியில் ஸ்ருதிஹாசன் மீது குதிரை சவாரி செய்வதுபோல் ஏறி அமரும் அவரது காதலன் ஸ்ருதிஹாசனின் பின்புறத்தில் தட்டுவார். பார்ப்பதற்கு சற்று அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை திட்டி வருகிறார்கள். தந்தை எட்டடி பாய்ந்தால் மகள் பதினாறு அடி பாய்வார் போல எனவும் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.