ஸ்ரீ பிரியாவிற்கு பிடிக்காத சிவாஜி படம்.. வசூலில் கொடிகட்டி, நடிப்பில் வெளுத்து வாங்கிய படம்

தற்போது வரை நடிப்பு என்றாலே உதாரணமாக இருப்பது சிவாஜி கணேசன் படங்கள்தான். ஆனால் நடிகை ஸ்ரீபிரியா சிவாஜி நடிப்பில் வெளியான படங்களில் ஒரு முக்கியமான படத்தை பிடிக்காது என கூறியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. இவர் ஏராளமான நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் நடிகைகள் பொருத்தவரை ஒரு கட்டத்திற்குப் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காது. அப்படித்தான் ஸ்ரீபிரியாவிற்கும் ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராமல் போக சினிமாவை விட்டு விலகினார்.

சமீபத்தில் பேட்டி கொடுத்த ஸ்ரீபிரியா சிவாஜி ஒரு பெரிய நடிகர் அவரைப் போல் யாராலும் நடிக்கவே முடியாது, அந்த அளவிற்கு ஒரு திறமைசாலி என கூறினார். மேலும் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே எனக்கு பிடிக்கும். ஆனால் திரிசூலம் படத்தின் கதை மட்டும் எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார். அதற்கு காரணம் படத்தின் கதை அம்சம் சிறப்பாக இருக்காது என தெரிவித்தார்.

ஆனால் சிவாஜி வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூல் பெற்ற படங்களில் திரிசூலம் படமும் இடம்பெற்றுள்ளது. அதுவும் இப்படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்படி இருக்கும்போது ஸ்ரீபிரியா இந்த மாதிரி சொன்னது ஆச்சர்யமாக உள்ளது.

படத்தின் கதை நன்றாக இருந்ததால் தான் படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. இப்படி இருக்கும்போது படத்தின் கதை இல்லை என்றால் படம் எப்படி வெற்றி அடைந்திருக்கும் என்பது புரியவில்லை.