விஜய் தொலைக்காட்சியின் புதுவிதமான பரிமாணத்தில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 4 சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்ச்சி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது.

வழக்கம் போல் இந்த சீசனிலும் நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனுக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணத்தினால் தற்போது தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் கட்டாயம் போட்டிருக்க வேண்டுமாம்.

போட்டியாளர்களின் பெயர் பட்டியல் முழுமையாக தெரியாத இந்நிலையில், ஜோஸ்வா திரைப்படத்தில் நடித்த நடிகர் வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். இதனால் இவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு வெளிப்படுத்தும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

என்னவென்றால், நடிகர் வருண் பிக்பாஸ் போட்டியாளராக தேர்வு ஆனதற்கு தனது நண்பர்களை அழைத்து 5 ஸ்டார் ஹோட்டலில் வெகு விமர்சையாக தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

வருண் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல போவதை இந்த பார்ட்டி மூலம் தனது நண்பர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்று நெட்டிசன்கள் கிசுகிசுக்கின்றனர்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் அன்மையில் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தை விரைவில் முடித்துவிட்டு, பிக் பாஸ் வீட்டில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.