ஸ்டார்ட் மியூசிக் சீசன்3 கிராண்ட் பினாலே.. 3 லட்சத்துடன் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்ற பிரபல சீரியல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க தூண்டும். அந்த வகையில் 2009ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஸ்டார்ட் மியூசிக் என்ற ரியாலிட்டி ஷோ இதுவரை வெற்றிகரமாக இரண்டு சீசன்களை நிறைவு செய்து தற்போது மூன்றாவது சீசனின் கிராண்ட் பினாலே இன்று நடைபெறவுள்ளது.

தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்க, அதன்பிறகு அவர் பிக் பாஸ் சென்றதில் இருந்தே மாகாபா ஆனந்த் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியானது குக் வித் கோமாளி, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்னத்திரை, ராஜாராணி2, கலக்கப்போவது யாரு, பாரதிகண்ணம்மா, தமிழும் சரஸ்வதியும் போன்ற நிகழ்ச்சி சேர்ந்த 8 குழுவினர்கள் தங்களுக்குள்ளே போட்டி போட்டனர்.

அதன் பிறகு  குக் வித் கோமாளி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி2, பாரதி கண்ணம்மா ஆகிய நான்கு குழுவினர் செமி பைனலுக்கு முன்னேறும் சென்றனர். பின்பு இந்த நான்கு பேரில் குக் வித் கோமாளி, ராஜா ராணி2 இருவருக்குமிடையே இன்று பைனல் நடைபெற்று வின்னர் யார் என்பதை தேர்வு செய்ய உள்ளனர்.

ஆகையால் இந்த இரண்டு குழுவினருக்கும் இடையே நடந்த போட்டியில் ராஜா ராணி2 சீரியல் குழுவினர்கள் முதலிடத்தைப் பிடித்து கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளனர். குக் வித் கோமாளி குழுவினர் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றனர்.

எனவே சுவாரசியமும் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக்கள் நிறைந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் வின்னரான ராஜா ராணி2 சீரியல் குழுவினருக்கு வெற்றிக் கோப்பையுடன் 3 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.