ஒரு தாயின் போராட்டங்களையும், தியாகத்தையும் பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமியின் கணவனாக வரும் கோபி தன் முன்னாள் காதலியான ராதிகாவிடம் நட்பு பாராட்டி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் கணவனை பிரிந்து வசித்து வரும் ராதிகா கோபியிடம் நட்பாகவே பழகுகிறார்.

ஆனால் கோபி தன் குடும்ப பின்னணியை மறைத்து ராதிகாவை கவர்வதில் குறியாக இருக்கிறார். இதற்காக பல தகிடுதத்தங்கள் செய்து வருகிறார். தற்போதைய எபிசோடில் ராதிகா கோபியுடன் கார் வாங்குவதற்காக செல்கிறார். அப்பொழுது காரின் விலையை எண்ணி அவர் தயங்குகையில் கோபி தன் நடிப்பினை அள்ளிக் கொட்டுகிறார்.

அதாவது காரின் விலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் உனக்கு உதவுகிறேன் ஏற்கனவே வீட்டிற்காக வாங்கிய லோன் உள்ளதால் நீ சிரமப்பட வேண்டாம். குழந்தை மையூவிற்கு பிடித்துள்ளது அவளுடைய சந்தோஷமே எனக்கு முக்கியம் என்று கூறி நைசாக ராதிகாவின் கையைப் பிடிக்கிறார். ராதிகாவும் அவருடைய பேச்சினால் கவரப்பட்டு புன்னகைக்கிறார். ஸ்கெட்ச் போட்டு மடக்கிய கோபி

கோபியின் மகனான செழியனுக்கு திருமணமாகி தற்போது குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் தாத்தாவாக போகும் கோபியின் சேட்டை சற்று அதிகமாகத்தான் உள்ளது.