ஷிவானிக்கு அடுத்து பிஎம்டபிள்யூ கார் வாங்கிய தாடி பாலாஜி.. சிகப்பு கலரில் மாலையோட மாஸ் போட்டோ

தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களில் நடித்துள்ளார் தாடி பாலாஜி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, சிரிப்புடா மற்றும் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் உட்பட அனைத்து நடிகர்களுடனும் காமெடியாக ஒரு சில படங்களில் நடித்தார். படங்கள் தாண்டி இவருக்கு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் நடுவராக கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

முதல் மனைவியை பிரிந்த தாடி பாலாஜி நித்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து மோதல்கள் ஏற்பட்டது. அதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனை பல பேட்டிகளில் இருவருமே கூறியுள்ளனர்.

அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் நித்தியா இருவரையும் டிஆர்பி காக கலந்து கொள்ள முயற்சி செய்தது விஜய் டிவி. இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ஒன்று சேரவில்லை என்பதுதான் பலருக்கும் கேள்வியாகவே இருந்தது.

தற்போது தாடி பாலாஜி பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார். அந்தக் காருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது தாடி பாலாஜிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.