ஷாலினியால் விஷ்ணுவர்தனுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. மேடம் இது உங்களுக்கே நியாயமா இருக்கா?

தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் அஜித், ஷாலினி ஜோடி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்று வரை கலக்கல் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் அஜித் நடிக்கும் படத்தின் கதைகளை தேர்வு செய்வதில் அவரது மனைவி ஷாலினிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அப்படி ஷாலினி பார்த்து வியந்த ஒரு திரைப்படம் ஹெச் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று.

அந்தப் படத்தைப் பார்த்த ஷாலினி இந்த மாதிரி படமெல்லாம் எடுக்க முடியுமா என்று ரொம்பவும் ஆச்சரியப்பட்டாராம். ஏற்கனவே அவரின் சதுரங்க வேட்டை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே அந்த படத்தின் இயக்குனர் வினோத்தின் மீது ஒரு நம்பிக்கையையும் அவருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

அதன் பிறகுதான் ஷாலினி, அஜித்தை வினோத்தின் இயக்கத்தில் நடிக்க கூறியிருக்கிறார். அதன் பின்பு உருவானதுதான் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் எல்லாம். ஆனால் ஷாலினியின் இந்த முடிவால் வேறு ஒரு இயக்குனரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அதாவது அஜீத், இயக்குனர் விஷ்ணுவர்தன் படத்தில் நடிப்பதற்காக காத்திருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே பில்லா, ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அந்த நட்பின் அடிப்படையில் விஷ்ணுவர்த்தன் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் ஷாலினி, வினோத் இயக்கிய திரைப்படங்களை பார்த்து அவரை அஜித்துக்கு படம் இயக்க கூறிவிட்டார். இதனால் விஷ்ணுவர்தன், அஜீத் கூட்டணி இணைய முடியாமல் போனது. மேலும் வலிமை திரைப்படமும் முடிவதற்கு நீண்ட காலம் ஆனது.

தற்போது வலிமை படம் ரிலீசாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இதையடுத்து வினோத் அஜித் கூட்டணி அடுத்த படத்திலும் இணைந்துள்ளார்கள். இந்நிலையில் விஷ்ணுவர்தன் மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குவது சற்று சந்தேகம் தான்.