ஷாருக்கான், நயன்தாரா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? தொடர் கதையாகும் அட்லீயின் காப்பி

ராஜா ராணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக மூன்று படங்கள் தளபதி விஜயை வைத்து அட்லி இயக்கி இருந்தார். மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த அட்லி தற்போது தமிழ் சினிமாவை தவிர்த்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். முதன்முறையாக ஹிந்தியில் இயக்குனராக அறிமுகமாகும் அட்லி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் தங்கல் பட புகழ் சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகை பிரியாமணி மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் அட்லி – ஷாருக்கான் முதன் முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்திற்கு லயன் என தலைப்பு வைத்துள்ளதாக இணையத்தில் செய்தி ஒன்று கசிந்து வருகிறது. மேலும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக படம் தொடர்பான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிங்கம், புலி, சிறுத்தை இப்போ லயன்.

ஏற்கனவே லயன் பெயரில் சிலம்டாக் மில்லியனயர் பட ஹீரோ தேவ் பட்டேல் நடிப்பில் வெளிவந்து உள்ளது. எனவே மீண்டும் காப்பியா என ஆண்டி அட்லீ ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாண்ட் துக்காராம் மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி எழுதப்பட்ட கடிதத்தின் நகல் என ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அதில் தான் படத்தின் தலைப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

நடிக்க வராம குடைச்சல் கொடுக்கறீங்களாமே? மைக்கை புடிங்கி கார்த்திக் கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்ட கார்த்திக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரொமான்டிக் படங்களில் அவர் அதிகமாக நடித்துள்ளார். மௌன ராகம், உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல ...
AllEscort