ஷாருக்கான், அட்லி கூட்டணிக்கு நடக்கும் சதி வேலை.. இந்த படத்தின் தற்போதைய நிலைமை

பிகில் படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானுக்குபடத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஷாருக்கான் ஒரு வித்தியாசமான கதையை வைத்து ஒரு பிரம்மாண்டமான நடிகரை வைத்து இயக்க திட்டமிட்டு இருந்தார்.

2 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான்னிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். ஷாருக் கானுக்கும் கதை பிடித்து போக படத்தில் நடிக்க சம்மதித்தார். இதனால் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். இப்படத்தில் ஷாருக்கான் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆனால் முழுக்க முழுக்க இப்படம் கமர்ஷியல் எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சமீபகாலமாக அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படம் டிராப் ஆகிவிட்டதாகவும். இதனால் அட்லி மன உளைச்சலில் இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. மேலும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களும் கிட்டத்தட்ட அட்லி ஷாருக்கானின் படம் 90% முடிந்துவிட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் செல்லும்போது இப்படத்தை டிராப் செய்து விட்டதாகவும் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அட்லி இயக்கும் லயன் திரைப்படம் ட்ராப் ஆகவில்லை. அடுத்த 10 நாட்கள் படத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக அட்லிக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஷாருக்கான் பதான் எனும் படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை எனவும் ஆனால் ஷாருக்கான் லயன் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கிடைக்கும் நேரங்களை வைத்து லயன் படத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் அட்லியை பிடிக்காத ஒரு சிலர்தான் படம் டிராப் ஆனதாகவும் ஷாருக்கானுக்கு அட்லி இயக்கிய விதம் பிடிக்கவில்லை எனவும் தவறாக கூறி வருகின்றனர். ஆனால் அது எதுவும் உண்மை இல்லை ஷாருக்கானுக்கு கால்ஷீட் பிரச்சினை மட்டும்தான் உள்ளது. தற்போது ஷாருக்கான் லயன் படத்தில் நடித்து வருவதால் வருகிற தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.