ஷாருக்கானுடன் நடிக்க கண்டிஷன் போட்ட நயன்தாரா.. விழி பிதுங்கி நிற்கும் அட்லீ.!

பல வருடங்களுக்கு முன்பே ஷாருக்கானிடம் கதையைக் கூறிய அட்லீக்கு தற்போது தான் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு லயன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பாலிவுட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றன. ஆனால் சமீப காலமாக அட்லி பெரிய அளவில் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை வழக்கில் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஷாருக்கான் அட்லி படத்தில் இருந்து அப்படியே விலகி தற்போது மகனை எப்படியாவது சிறையில் இருந்து மீட்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வைத்து நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

அட்லி நம்பி பல கோடி செலவு செய்துள்ள தயாரிப்பு நிறுவனம் ஷாருக்கான் பாதியில் சென்றதால் என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர். மேலும் ஷாருக்கான் பெரிய நடிகர் என்பதால் படத்தில் நடித்து முடித்த பிறகு நீங்கள் செல்லுங்கள் என சொல்லவும் முடியாமல் அட்லி தவித்து வருகிறார். மேலும் ஷாருக்கான் வரும்வரை நயன்தாராவின் காட்சிகளை எடுத்துள்ளார்.

தற்போது ஷாருக்கான் அளவிற்கு நயன்தாராவும் மற்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருவரும் சரியான கால்ஷீட் கொடுத்ததால்தான் அட்லி படத்தை இயக்கி வந்தார். தற்போது இடையில் ஷாருக்கான் சென்றுவிட்டதால் ஷாருக்கான் நயன்தாராவை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகள் தற்போது எடுக்க முடியாமல் போயுள்ளது.

இதனால் நயன்தாரா நான் மற்ற படங்களுக்கு கால்சீட் கொடுத்து உள்ளேன். அதனால் என்னுடைய காட்சிகளை எடுத்து விடுங்கள் என நயன்தாரா கூறியுள்ளார். அதற்கு ஷாருக்கான் வந்தால்தான் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க முடியும் என அட்லி கூறியுள்ளார். இதனால் நயன்தாரா இந்த ஒரு படத்தை நம்பி நான் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் இருக்க முடியாது. அதனால் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு ஹீரோயினை தேர்வு செய்து கொள்ளுங்கள் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு சிலர் ஷாருக்கான் தனது மகனுக்காக செல்வது சரிதான். ஆனால் ஷாருக்கானுக்கு நயன்தாரா காத்திருக்க முடியாது. அதனால் நயன்தாரா கால்ஷீட் கொடுத்தபடி மற்ற படங்களில் நடிப்பார் என கூறியுள்ளனர். இதனைக்கேட்ட ஷாருக்கான் அதிர்ச்சியில் நயன்தாராவை திரும்பி பார்த்து கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் தற்போது அட்லி ஷாருக்கானை திட்டவும் முடியாமல் நயன்தாராவிடம் கெஞ்சவும் முடியாமல் தவித்து வருகிறார்.

நடுரோட்டில் டிரெஸ்ஸை அவுத்து காட்டவா என கேட்ட ரேகா நாயர்.. பயில்வானுக்கு பதில் சொன்ன பார்த்திபன்

நேற்று முதலே பயில்வான் ரங்கநாதன் மற்றும் ரேகா நாயர் பற்றிய விஷயங்கள் தான் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யூடியூப் வீடியோக்கள் மூலம் நடிகைகளை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் ...