ஷங்கர் மகளுக்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு வாரிசு நடிகை.. அழகில் சொக்கி போன ரசிகர்கள்

அரசியலில் மட்டும் வாரிசு அரசியல் கிடையாது சினிமாவிலும் வாரிசு சினிமா உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் இது நிலவி வருகிறது. அவ்வளவு ஏன் தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை நடிகர்கள் கூட திரையுலகில் வலம் வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் அவ்வாறு ஏராளமான வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளனர். உதாரணமாக நடிகர் முத்துராமன் அவரது மகன் கார்த்தி அவரது மகன் கெளதம் கார்த்திக் என மூன்று தலைமுறை நடிகர்கள் உள்ளனர். அதேபோல் நடிகர் சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் அடங்குவார்கள்.

இதுதவிர நடிகைகளும் உள்ளார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என பலர் உள்ளனர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி கார்த்தி நாயகனாக நடிக்கும் விருமன் படம் மூலம் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே மற்றும் ஒரு இயக்குனரின் மகள் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

தரமணி படம் மூலம் பிரபலமான நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தான் இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் ராமராக நடிக்க இதுதான் காரணம்.. வரலாறு தெரியாமல் சர்ச்சையை கிளப்பும் நபர்கள்

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது ஆர்ஆர்ஆர் படம். அத்துடன் இப்படத்திற்கு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இப்படத்தில் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர், ராம ...