ஷங்கர் மகளுக்கு போட்டியாக களமிறங்கும் மற்றுமொரு வாரிசு நடிகை.. இளசுகளை வசியம் செய்யும் அழகு.!

தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நடிகர்களும், இயக்குனர்களும் அவர்களோடு அல்லாமல் அவர்களது குழந்தைகளையும் சினிமாவில் வாரிசு நடிகர்களாக களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில் மூன்று தலைமுறை நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்கள். உதாரணமாக மறைந்த நடிகர் முத்துராமன், அவரது மகன் கார்த்திக் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் ஆகியோரை கூறலாம்.

ஆண் வாரிசு நடிகர்கள் மட்டுமல்லாமல் பெண் வாரிசு நடிகைகளும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் களம் இறங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளவர் தான் சரஸ்வதி மேனன். இவர் வேறு யாருமல்ல பிரபல இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் தான்.

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்த ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி தான் தற்போது தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். ராஜீவ்மேனன் தமிழில் மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், இந்த படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தரமணி படம் மூலம் பிரபலமான நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தான் இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி நடிகையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமாகி உள்ள நிலையில், தற்போது மற்றொரு இயக்குனரின் மகளும் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

60களில் வில்லியாக ஆட்சி செய்த 2 நடிகைகள்.. நீலாம்பரி, கோமலவள்ளி இவங்க முன்னாடி ஒன்னுமே இல்ல

இப்போதைய தமிழ் சினிமாவில் ரம்யா கிருஷ்ணன், வரலட்சுமி போன்ற நடிகைகள் தங்களுடைய வில்லத்தனமான நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்திலேயே இவர்களை மிஞ்சும் அளவுக்கு தங்களுடைய வில்லத்தனத்தால் மிரட்டிய நடிகைகளும் ...
AllEscort