ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி.. 18 வருடம் கழித்து உடையும் சீக்ரெட்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக உருவாகியிருந்தது பாய்ஸ். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பல்வேறு கலவையான விமர்சனங்களில் சிக்கி சின்னாபின்னமானது.

சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன் என 5 இளைஞர்களை வைத்து இளைஞர்களின் காதல் கதையை மையப்படுத்தி படம் எடுத்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

மாறாக சங்கருக்கு ஏகப்பட்ட கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தது. இப்படி ஒரு தரக்குறைவான படத்தை எடுத்து வைத்துள்ளார் என்ற அவப்பெயரும் அவருக்கு உண்டானது. பாய்ஸ் படத்தின் கதைக்கரு நன்றாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஆசைப்பட்டு புகைப்படம் அனுப்பியதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பாய்ஸ் பட அனுபவத்தையும் தன்னுடைய ஆரம்பகால சினிமா அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் பாய்ஸ் படத்தில் 5 நடிகர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதலில் நடிக்க இருந்ததாகவும் அந்த பட வாய்ப்பை மிஸ் செய்ததாகவும் கூறியிருந்தார்.

அது சம்பந்தமாக கேள்வி எழுப்பிய நிலையில், நல்லவேளை மணிகண்டன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கவில்லை எனவும், பாய்ஸ் படத்தில் நடிக்க ஆட்கள் தேடிய போது நானும் புகைப்படம் அனுப்பி வைத்துள்ளேன் எனவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.