வேஷ்டி சட்டை, கூலிங் கிளாஸ், ராஜநடை.. அண்ணாத்த ரஜினியின் புதிய போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

முன்னதாக அண்ணாத்த படம் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டரில் வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் கடைசியாக வெளியான டாக்டர், அரண்மனை 3 போன்ற படங்கள் வெற்றி பெற்றதால் தைரியமாக வசூல் வேட்டையாட வருகிறது அண்ணாத்த.

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அண்ணாத்த படத்தின் பிரமோஷன் வேலைகளை அதிரடியாக தொடங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். அந்த வகையில் தினமும் போஸ்டர் அப்டேட் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட வைத்து வருகின்றனர்.

அதைப்போல் தான் நின்று அண்ணாத்தா திரைப்படம் யுஏ சான்றிதழ் வாங்கிய உள்ளதை புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் கூலிங்கிளாஸ் வேஷ்டி சட்டை ராஜநடை என பல வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே சுறுசுறுப்பான ரஜினியை இந்த படத்தில் பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ரஜினி இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த படம் எனக்கு இன்னொரு படையப்பா என சிறுத்தை சிவாவிடம் தெரிவித்ததாக ஒரு செய்தி வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று. மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் மீனா குஷ்பூ சூரி சதீஷ் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

செகண்ட் ஹீரோயின் நிலைக்கு தள்ளப்பட்ட த்ரிஷா.. எல்லாத்துக்கும் காரணம் அந்த படம் தான்

பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் திரிஷா. பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ...