வேஷ்டி சட்டையில் கெத்தாக புகைப்படம் வெளியிட்ட பரத்.. ட்வின்ஸ் பசங்க செம மாஸ்.!

பாய்ஸ் படத்தில் ஆரம்பித்து காதல், வெயில், அரவான், ஐந்து ஐந்து ஐந்து, ஸ்பைடர் என தன் நடிப்பால் அசத்தி வருபவர் பரத். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிசில் பெரிய மாயாஜாலத்தை உருவாகவில்லை என்பதே கோலிவுட் பட்சிகளின் பேச்சு. இன்றும் தனெக்கென ஒரு இடத்தை பிடிக்க மனிதர் முழு வீச்சில் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் சல்மான் கானுடன் ராதே ஹிந்தி படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமன்றி மலையாள சினிமாவிலும் சிறு ரோல்கள் தான் எனினும் ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பரத் மற்றும் ஜேஷ்லி தம்பதிக்கு இரட்டை குழைந்தைகள் பிறந்தது நாம் அறிந்த விஷயம் தான். இந்நிலையில் பரத் விநாயக சதுர்த்தி ஸ்பெஷலாக தனது இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மூவரும் வேஷ்டி சட்டையில் உள்ள இந்த போட்டோ பல லைக்ஸ் குவித்து வருகிறது.

ரம்யா நம்பீசன் படம் நேரடியாக டிவியில் ரிலீஸ்.. போட்டி போட்டுக்கொண்டு வாங்கிய பிரபல சேனல்!

கொரோனா பாதிப்பினால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே புதிய படங்களை வெளியிடும் முறையை மாற்றி, தற்போது ஓடிடியிலும் நேரடியாக தொலைக்காட்சிகளிலும் திரையிடப்படுகிறது. அந்த வகையில் பிரபல தொலைக் காட்சிகள் அனைத்தும் போட்டா ...