வேற ஹீரோயினி இல்லையா.? நயன்தாரா, சமந்தா ரிட்டயர்டு ஆகும் நேரம் வந்தாச்சு

தமிழ் சினிமாவில் 90களில்  முன்னணி நடிகைகளாகவும், ரசிகர்களின் கனவுக் கன்னிகளாக ஜோதிகா மற்றும் சிம்ரன் ஒரு ரவுண்ட் வந்தனர். அதன்பின் நயன்தாரா, சமந்தா. இப்பொழுது அவர்களுக்கு அடுத்த தலைமுறையாக வருகிறது மூவர் கூட்டணி. தமிழ் சினிமாவில் எந்த படங்களாக இருந்தாலும், கதாநாயகர்களை தேர்வு செய்தபின் இவர்கள் மூவரையும் தான் தேடி அலைகின்றனர்.

கிட்டத்தட்ட எல்லா பெரிய படங்களுமே இவர்களிடம் வந்து தான் செல்கிறது. இவர்கள் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் தான் வேறு ஹீரோயினுக்கு வாய்ப்பு. இல்லை என்றால் முதல் சான்ஸ் இவர்களுக்குத்தான். இவர்கள் ரசிகர்களிடமும் மிகக் குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா: ரியாக்சன் குயின் என சொல்லப்படுகிற ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தன் படத்திற்குப் பிறகு அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு மாறிவிட்டது. அதுவும் புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஆட்டம் பல கோடி ரசிகர்களை வலையில் விழ வைத்தார். தற்போது ராஷ்மிகா மந்தனா எக்கச்சக்க பட வாய்ப்புகளை கையில் வைத்ததுடன், தளபதி 66 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரியங்கா மோகன்: சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான பிரியங்கா மோகன், அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த டான் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. எனவே மெழுகு சிலை போல் இருக்கும் பிரியங்கா மோகனுக்கும் தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

பூஜா ஹெக்டே: ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, அதன் பிறகு தெலுங்கில் தொடர்ந்து 5 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து நயன்தாரா அளவுக்கு முன்னணி நடிகையாக மாறிய பின்பு, அவரைத்தேடி தளபதி விஜயின் பீஸ்ட் பட வாய்ப்பு வந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு பூஜா ஹெக்டே இந்திய நடிகையாக தொடர்ந்து அனைத்து மொழி படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கிறார்.

இவர்கள் மூவரும் தற்போது கோடம்பாக்கத்தை ஆட்சி செய்து வருகின்றனர். எங்கே திரும்பினாலும் இவர்களைப் பற்றிய பேச்சு. எல்லா படங்களுமே இவர்கள் கால்சீட் இல்லாமல் காத்துக் கிடக்கின்றனர்.