தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது உலகமே கொண்டாடும் நாயகனாக மாறி விட்டார். இதனால் அவரது ஒவ்வொரு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் விண்ணை பிளக்கும் அளவுக்கு உள்ளது. சினிமாவில் முதல் இடத்தை நோக்கி வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மாறன் போன்ற படங்கள் இறுதிகட்டத்தில் உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நானே வருவேன் என்ற படத்தின் மூலம் இணைகின்றனர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

நானே வருவேன் படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்ட நிலையில் அதன் பிறகு படப்பிடிப்பு பற்றி எந்த செய்தியும் இல்லை. இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு வருத்தம் தான். இடையில் நானே வருவேன் படத்தை ராயப்பன் என பெயர் மாற்றி விட்டனர் எனவும் ஒரு வதந்தியை கிளப்பி விட்டனர்.

தற்போது ஒரு வழியாக தனுஷ் மற்ற படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு அண்ணன் செல்வராகவன் நானே வருவேன் படத்தில் இன்று முதல் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இடைவெளி இல்லாமல் நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்பதும் கூடுதல் தகவல்.

அதனை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் காட்டில் வேட்டையாடும் வேட்டைக்காரனை போல தனுஷ் கையில் துப்பாக்கி எம்ஜிஆர் காலத்து தொப்பி என அட்டகாசமாக உள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.