திருநங்கையான நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிக்பாஸ் தொடங்கப்படுவதற்கு முன் நேற்று நமிதா வெளியேறியது குறித்து பிக்பாஸ் நமக்கு அறிவித்தார். எனினும் அவர் ஏன் வீட்டை விட்டு சென்றார் என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை.

வழக்கமாக சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது நடிகர் கமல்ஹாசன் முந்தைய நாளான வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என்ற காட்சிகளை நமக்கு போட்டு காட்டுவார்.

வழக்கத்திற்கு மாறாக நேற்று கமல்ஹாசன் மேடைக்கு வந்தவுடன் வெள்ளிக்கிழமை காட்சிகளை காட்டாமல் நேரடியாக போட்டியாளர்களிடம் பேச தொடங்கிவிட்டார்.

வெள்ளிக்கிழமை காட்சியில் நமிதா வெளியேற்றம் குறித்து காணலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. மேலும் நமிதாவிற்கு வீட்டிற்குள் என்ன நடந்தது? என்றும் எதனால் வெள்ளிக்கிழமை எபிசோட் வரவில்லை என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போதும் போட்டியாளர்களுடன் சண்டை போட்ட நடிகை மதுமிதா கையை அறுத்துக் கொண்டதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் நடிகர் சரவணனும் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது நமிதாவின் வெளியேற்றம் பிக்பாஸால் நடத்தப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.