வெளிவந்த விக்ரம் படத்தின் முழு கதை.. ஜெயிலிலே ரத்தம் தெறிக்க சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. படத்தில் சில முக்கியமான எடிட்டிங் வேலைகளை இயக்குனர் மும்முரமாக செய்து வருகிறார். கமலின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாக இருக்கிறது.

இந்த ஷூட்டிங் முடித்த கையோடு கமல் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். அங்கு அவருக்கு முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மறைப்பதற்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது. அதை முடித்துக்கொண்டு கமல் விரைவில் புதுப்பொலிவுடன் இந்தியாவுக்கு திரும்ப இருக்கிறார்.

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஒருவித எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் விக்ரம் படத்தின் கதை இதுதான் என்ற ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.

கதைப்படி இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக அதே ஜெயிலுக்கு செல்கிறார். இப்படி முக்கால்வாசி கதை ஜெயிலில் தான் நகரும் படி எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் காட்சிகள் உள்ளிட்ட ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் எடுத்துள்ளாராம். ஏனென்றால் கமலின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது.

அதன் பிறகு அவர் அரசியல், பிக் பாஸ் என்று பயங்கர பிஸியாக இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இப்படத்தில் கமலின் ஆட்டத்தை காண அவருடைய ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.