வெளிவந்த சாணி காகிதம் படத்தின் கதை.. செல்வ ரகாவனயே வந்து பாருன்னு சொல்லி நடிக்குதுபா இந்த பொண்ணு

கீர்த்தி சுரேஷ் தற்போது கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது சாணி காகிதம் திரைப்படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மே 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. ரத்தக் களறியுடன் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து செய்யும் அடுக்கடுக்கான கொலைகளை பார்க்கும் போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் செல்வராகவனை வந்து பாரு என்று சொல்லி நடிப்பில் அசத்தியிருக்கிறார்

இந்நிலையில் சாணி காகிதம் படத்தின் கதை இதுதான் என்ற ஒரு தகவல் இணையதளத்தில் உலா வருகிறது. அதாவது கான்ஸ்டபிளாக பணி புரியும் கீர்த்தி சுரேஷ் தன் கணவர் மற்றும் 5 வயது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அனைத்தையும் இழக்கும் கீர்த்தி சுரேஷ் அதற்கு காரணமானவர்களை செல்வராகவன் துணையுடன் பழி வாங்குவதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத் திரைப்படம் குறித்து கீர்த்தி சுரேஷும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இதுவரை நான் நடித்த கதைகளில் இந்த படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்றும், மிகவும் உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு பெருமையாக இருந்தது என்றும் இந்த படத்தை பற்றி அவர் தெரிவித்துள்ளார்.