வெளியில் கொக்கரிக்கும் வேல்ஸ் நிறுவனம்.. வீட்டுக்குள் அள்ளோளப்படும் கேப்டன் வருண்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வேலைகள் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று கண்காணிப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்தின் கேப்டன் தேர்வுக்கான போட்டியில் வென்ற சிபியை தன்னுடைய நாணயத்தின் ஆற்றலால் மாற்றி அமைத்து பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக வருண் மாறி உள்ளார்.

வருண் இத்தகைய முடிவெடுப்பதற்கு முக்கிய காரணம், சென்ற வாரம் சின்ன பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டபோது கடைசி நிமிடம் வருண் மற்றும் அபினை இருவரையும் காப்பாற்றப்பட்டனர். அப்போது கமல், அபினை மற்றும் வருண் இருவரையும் இனியாவது விளையாடுங்கள் என்று கடைசி வார்னிங் கொடுத்தார். இதை மனதில் வைத்துக் கொண்டு தான் வருண் கேப்டன் ஆனால் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடலாம் என்று பக்கா ப்ளான் போட்டு செய்துவிட்டார்.

ஆனால் பிக் பாஸ் கேப்டனுக்கு அதிகாரம் கொடுப்பதைவிட கொஞ்சம் வித்யாசமான தண்டனையை கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதலில் வருண் கேப்டன் அதற்காகவே இந்த வாரம் முழுவதும் பாத்ரூம் கழுவ வேண்டும் என்று பிக் பாஸ் கட்டளையிட்டார். யார் இந்த வீட்டில் தப்பு செய்தாலும் வருண் தோப்புக்கரணம் போடும் வேண்டும் என்று பிக்பாஸ் மற்றொரு தண்டனையையும் கேப்டன் வருணுக்கு தந்தது.

அத்துடன் நேற்றைய நிகழ்ச்சியில் நிரூப் மைக் மாட்டாமல் இருந்ததற்கு, வருண் தோப்புக்கரணம் போட்டது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி நடப்பதெல்லாம் வினோதமாக இருந்தது. இது ஒருபுறமிருக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேசன் அவர்களின் மருமகன் வருண் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கேப்டன் ஆனதற்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் கேப்டனான வருணை பிக் பாஸ் ஒவ்வொரு நாளும் வச்சு செய்கின்றார். இருப்பினும் வருண் இவ்வளவு நாள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்த நிலையில், இந்த இரண்டு நாட்கள் தான் அவருடைய செயல்பாடுகள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

அத்துடன் வருண், அக்ஷரா உடன் சேர்ந்து மற்றவர்களுடைய நாணயத்தை திருடவும் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அது செல்லுபடியாகுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.