வெற்றிமாறனை நம்பினால் வேலைக்காகாது.. முரட்டு இயக்குனரிடம் தஞ்சமடைந்த சூர்யா!

ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதில் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படமும் இருக்கிறது. இந்தப்படம் உருவாகப் போகிறது என்று வெளியான அறிவிப்புக்கு பிறகு இதைப் பற்றிய எந்த ஒரு தகவலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. அதோடு இயக்குனர் வெற்றிமாறனும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்தத் திரைப்படத்தைப் பற்றிய தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அந்த படம் உருவாகுமா என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது.

இந்நிலையில் சூர்யா தற்போது படப்பிடிப்புக்காக மதுரைக்கு கிளம்பியுள்ளார். பாலா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது சூர்யா இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரைக்கு செல்கிறார்.

அங்கு இந்த படத்திற்காக மிக பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது. அதில் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் பாலா, சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கி விடலாம் என்ற ஒரு முடிவில் இருக்கிறார். இதற்காக ஸ்கெட்ச் படத்தில் செட் போட்ட ஆர்ட் டைரக்டர் இந்த படத்தின் பிரம்மாண்ட செட்டை தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.