தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கையை போலவே தமிழ் சினிமா விமர்சகர்கள் எணணிக்கையும் அதிகம் தான் அந்த வகையில் பல ஆண்டுகளாக நாம் பார்த்து வந்த சன் டிவியின் டாப்.டென் மூவீஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் சினிமா விமர்சருமமான சுரேஷ் குமாரை ஒரு பேட்டியில் சந்திக்க நேர்ந்தது.

அப்போது அவர் கூறிய விடயங்கள் பலவும் ஆச்சர்யப்படுத்தியதுடன் இதை எல்லாம் செய்தால் நன்றாக இருக்குமா என்றும் யோசிக்க வைத்தது.

அப்போது அவர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தை பார்த்ததாகவும் அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வசனங்கள் குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்படியான மோசமான வசனங்கள் பலரால் ரசித்து பார்க்கப்படுகிறது பெண்கள் உட்பட என்றும் அந்த மாதிரி படங்களில் இம்மாதிரியான வசனங்களை அடுக்குவதில் முகச்சுழிப்பு மட்டுமே எஞ்சுகிறது என்றும் கூறினார்.

மேலும் தொடர்ந்தவர் அங்கு இருக்கின்ற வாழ்வியலின் உண்மை நிலையை எடுத்துரைக்க எத்தனையோ வழிகள் இருந்தும் இதுபோன்ற சில தீய வார்த்தைகளால் தான் காட்ட வேண்டுமா என்றும் கேட்டார்.

பல்வேறு படங்களில் பல்வேறு காட்சிகளில் இடம்பெறும் புகைபிடிக்கும் மது அருந்தும் காட்சிகள் தனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றும் முழுமையான காட்சிகளை தந்துவிட்டு அதன் கீழே உடல் நலத்திற்கு தீங்கானது என குறிப்பிடுவதில் எந்த பலனும் இல்லை என்றும் கூறினார்.

ஏ சான்றிதழுடன் வெளிவரும் படங்களுக்கு எத்தனை தியேட்டர் உரிமையாளர்கள் 18+ க்கு மட்டும் டிக்கெட் தருகிறார்கள் அல்லது 18+ மட்டும் வருவதாய் கண்கானிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இவை எல்லாவும் என் ஒருவனின் ரசனையாக சொல்லவில்லை பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களாக பதிவிடுகிறேன் என்றும் குறிப்பிட்டார். அதனால் தான் நான் நடுநிலை விமர்சனங்களை எடுத்து வைப்பதாக கூறினார்.

தான் ஒரு படம் எடுத்தால் அதில் எத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும் புகை பிடிக்கும் காட்சியோ அல்லது மது அருந்தும் காட்சியோ அந்த படத்தில் நிச்சயம் இடம்பெறாது என்றும் கூறினார்.
முடிந்த வரை இயக்குனர்கள் சமூகத்தை சீரழிக்கும் இம்மாதிரியான விடயங்களை கையிலெடுக்காமல் சமூகத்தில் சொல்வதற்கு எவ்வளவோ உண்டு அவற்றை காண்பிக்கலாம் என்றார்.

இங்கே இருக்கின்ற உச்ச நட்சத்திரங்களுக்கு என்று ரசிகர் படைகளே உண்டு அவர்களை காண்பிக்கும் தருணம் அதே தொற்று ரசிகர்களிடத்திலும் வந்து சேர்கிறது என்பதில் சந்தேகமில்லை. பெரிய நடிகரோ சின்ன நடிகரோ முடிந்த வரை புகையற்ற மதுவற்ற ப்ரேம்களை மக்களிடம் சேர்க்க இயக்குனர்கள் தான் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.