வெற்றிமாறனை கடுப்பேற்றும் விஜய் சேதுபதி.. எல்லாம் ஒரு அளவுக்குத்தான் பாஸ்

இன்றைய தேதிக்கு வெற்றிமாறன் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய கதைக்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்பதை கனகச்சிதமாக தேர்வு செய்து படம் இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அந்த வகையில் அடுத்ததாக காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை எனும் படத்தை எடுத்து வருகிறார்.

முதலில் சூரி மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரும் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் பாரதிராஜாவுக்கு சூட்டிங் ஸ்பாட் சரிவர செட் ஆகாததால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பில் படம் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது விஜய் சேதுபதியால் படம் நினைத்த படி நடிக்க முடியாமல் மேலும் வெற்றிமாறனுக்கு ஏகப்பட்ட சோதனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பெரும்பாலும் விஜய் சேதுபதி தான் காரணம் என்கிறார்கள்.

விஜய்சேதுபதி சமீபகாலமாக கதையின் முக்கியத்துவம் செலுத்தாமல் கிடைக்கும் படங்களின் பட வாய்ப்புகளை அள்ளி போட்டு சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார் என ஏற்கனவே கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தன. அதற்கு தகுந்தார்போல் வாரத்திற்கு 2 படம் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதனால் வெற்றிமாறன் படத்திற்கு சரியாக தேதிகள் ஒதுக்க முடியவில்லையாம். இதனால் இன்னும் படப்பிடிப்பு அப்படியே பாக்கி இருக்கிறது. விஜய் சேதுபதி தேதி கொடுத்தால் மட்டுமே அந்த பகுதிகளை முடிக்க முடியுமாம். வெற்றிமாறனுக்கு அடுத்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க வேண்டிய நெருக்கடி.

இதை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் விஜய்சேதுபதி நடந்து கொள்வது அவருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளதாம். இப்படித்தான் முதலில் வட சென்னை படத்தில் அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது படம் ஆரம்ப நிலை என்பதால் ஈசியாக ஆளை மாற்றி விட்டார்கள். ஆனால் தற்போது பாதி படத்தில் விஜய்சேதுபதி நடித்து விட்டதால் பாதி கிணறு தாண்டி மீதி கிணறு தாண்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது விடுதலை படக்குழு.