வெற்றிமாறனின் வெற்றி ரகசியத்தை புட்டு புட்டு வைத்து பிரபலம்.. இந்த ஒரு விஷயம் இவரால் மட்டுமே சாத்தியம்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சமூக கருத்தை மையமாகக் கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன.

வெற்றிமாறன் எப்போதுமே படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏதாவது ஒரு முக்கியமான சம்பவத்தை மையமாகக் கொண்டே இருக்கும். மற்ற இயக்குனர்கள் போல் நடிகர் நடிகைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சக நடிகர்களுக்கும் வெற்றிமாறன் படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அதனாலதான் படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் இன்றுவரை வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் வெற்றிமாறன் பொருத்தவரை நாவல்களை மையமாக கொண்டுதான் படத்தை இயக்குவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால தான் இவருடைய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என பலரும் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் தனக்குத் தோன்றும் ஒரு சில விஷயங்களையும் சேர்த்து படத்திற்கு வலு சேர்ப்பார்.

சமீபத்தில் மனோ பாலா வெற்றிமாறன் நாவல்களை வைத்து தான் படங்களை இயக்குவார். மேலும் அந்த புத்தகத்தை முழுமையாகப் படித்து விட்டு அதில் ஒரு சில மாற்றங்களை சேர்த்து படங்களை இயக்குவதில் வல்லவர். அதனால் தான் இன்று வரை வெற்றிமாறனின் படங்களுக்கான வரவேற்பு இருந்து வருகிறது என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் படத்திற்கு தேவையான வசனங்களையும், காட்சிகளையும் சரியான முறையில் எடுத்து படத்தின் வெற்றிக்கு முழுமையாக ஈடுபடுவார் எனவும் கூறினார். தற்போது இவர் இயக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அதனால் வெற்றிமாறன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் எனவும் கூறினார்.

தமிழ் சினிமாவுக்கு ஒரேடியாக கும்பிடு போடும் ஷங்கர்.. ஊராடா இது என எஸ்கேப்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அது நிச்சயம் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அந்த அளவுக்கு அதிக பட்ஜெட்டில் திரைப்படத்தை எடுத்து அதில் வெற்றியும் ...