வெறும் 18 நாளில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்த மோகன்லால்.. அசந்துபோன திரையுலகம்

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மோகன்லால் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் விஜய்யுடன் இணைந்து ஜில்லா, சூர்யாவுடன் இணைந்து காப்பான் உள்ளிட்ட படங்களை கூறலாம்.

இவர் தற்போது மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் மரைக்கார், அரபிக்கடலிண்டே சிம்ஹம், ப்ரோ டாடி, 12th மேன், ஆராட்டு உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாக உள்ளன. இந்நிலையில் மோகன் லால் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் அலோன் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தின் பணிகள் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் வெறும் 18 நாளில் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பையும் வெறும் 18 நாளில் எப்படி எடுத்து முடித்தார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில் சரியாக திட்டமிட்டு படமாக்கியதால் மட்டுமே இது சாத்தியமானது என படத்தின் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்து வரும் இப்படத்தின் கதையை ராஜேஷ் ஜெயராம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜமும், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாயும், எடிட்டராக டான் மேக்ஸ் ஆகியோரும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

கமல் வயது நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்.. காசுக்காக இப்படியுமா!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். வாரிசு நடிகைகளில் ஒருவரான இவர் ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவின் மூலம் பெயரும் புகழும் பெற்றார். அதன் பிறகு சூர்யா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் ...
AllEscort