வெண்பா கதாபாத்திரத்தையே ஊத்தி மூடிய இயக்குனர்.. உறுதிப்படுத்திய பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை

சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கப்படும் நல்ல ஒரு பொழுதுபோக்கான விஷயம். அந்த வகையில் விஜய் டிவி சீரியல் என்றாலே அதற்கு தனி ஒரு மவுசு. அதிலும் அதில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிவருகிறது.

தற்பொழுது போதாத காலமோ என்னவோ இந்த சீரியலுக்கு சோதனை மேல் சோதனை. இந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மா மற்றும் வில்லி வெண்பா இந்த இரண்டு கதாபாத்திரம்தான் சீரியலை ஒரு சுவாரசிய நிலைக்கு எடுத்துச் செல்லும் இரண்டு துருவங்கள்.

இந்நிலையில் கதாநாயகியாக நடிக்கும் ரோஷினி சில காரணத்தால் சீரியலில் இருந்து வெளியேறிய தகவல் உறுதியான நிலையில், தற்பொழுது மேலும் ஒரு ஷாக்காக வில்லி வெண்பா கதாபாத்திரமே முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் வில்லி வெண்பாவாக நடிக்கும் ஃபரினா கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிரசவ காலம் நெருங்கி விட்டதால் தற்பொழுது ஓய்வு தேவை என நினைத்த படக்குழுவினர், அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை இந்த கதாபாத்திரத்தில் போட்டாள் மக்களால் ஏற்கமுடியாது என்று நினைத்து கதாபாத்திரத்திற்கே சில நாள் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளனர் இந்த பாரதி கண்ணம்மா டீம்.

தற்பொழுது வெண்பா கேரக்டர் சிறையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் சில நாட்களுக்கு சிறைவாசம் அனுபவிப்பது போல் கதையை கொண்டுவர முடிவு செய்துள்ள படக்குழு, வெண்பா ரோலின் கடைசி படப்பிடிப்பு காட்சிகளை எடுத்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து ஃபரினா தனது பிரசவத்திற்கு பின் மீண்டும் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், இந்த சீரியலில் வெண்பாவின் வேலைக்காரி சாந்தி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை புஷ்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மிஸ் யூ ஃபரினா’ என்று பதிவிட்டு இருப்பது இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

நயன்தாராவுக்கு 4 கோடி, எனக்கு தர மாட்டீங்களா! சம்பளத்தில் கறார் காட்டும் முன்னணி நடிகை

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் நடிகை சமந்தா தற்போது நடிப்பில் பிஸியாக உள்ளார். இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இது தவிர சமந்தா ஆங்கில படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ...