வெண்பாவை வைத்து சரியான ஆப்பு வைத்த சௌந்தர்யா.. பாரதி எடுத்த முடிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. எப்போதும் விறுவிறுப்பை அள்ளித் தெளிக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லை. தற்பொழுது மேலும் சீரியலில் அதிரடி திருப்பங்கள் பல நிகழ உள்ளன.

அந்தவகையில் போலீசில் பிடிபட்ட வெண்பாவிற்கு ஜாமீன் கிடைக்காமல் போகிறது. மேலும் அவர் வழக்கின் தீர்ப்பு வரும் வரை மருத்துவ பயிற்சிக்கு செல்ல கூடாது என்றும் அரசாணை வெளி வந்தது. இதையெல்லாம் பற்றி அகிலன் பாரதியிடம் கிண்டலாக சொன்னார்.

அதை கேட்டு காண்டான பாரதி வெண்பா ஒரு நிரபராதி. அவள் கண்டிப்பா எந்த தவறும் செய்யல. யாரோ செய்த சதியில் சிக்கிக்கிட்டா. கண்டிப்பா வெண்பாவிற்கு ஜாமீன் கிடைக்க நான் உதவி செய்வேன்.

மேலும் அவள் நிரபராதி என நிரூபிப்பேன் என்று அகிலனிடமும் தன் குடும்பத்தாரிடமும் சவால் விட்டார் பாரதி. அதைத்தொடர்ந்து இதையெல்லாம் கேட்டுகிட்டு சும்மா இருப்பாரா சௌந்தர்யா, இது தான் நல்ல சமயம் பாரதியின் சத்தியத்தை உடைத்து கண்ணம்மாவை காப்பாற்ற வேண்டும் ௭ன்று நினைத்த சௌந்தர்யா பாரதிக்கு சரியான ஆப்பு வைத்தார்.

அதாவது நீ அந்த வெண்பா வெளிவர உதவி செஞ்சா நான் கண்ணம்மாவிற்கு உதவி செய்வேன் என்று சௌந்தர்யா பாரதிக்கு தக்க பதிலடி கொடுப்பது போல் அதிரடியாக ப்ரோமோ ஒன்று வெளியாகி மக்களை ஆர்வத்தின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இதற்கு பாரதி என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து வரும் எபிசோடுகளில் காணலாம்.